தனியார் மருத்துவமனைகளில் தொ.அ.ஈ. பயனாளிகளால் செய்யப்படும் மருத்துவச் செலவுகளை மீளப் பெறுதல்
1. இரண்டாம் நிலை மருத்துவ செலவினை மீளப்பெறுதல்
காப்பீட்டாளர்கள் மற்றும்
அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அவசர கால கட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட
மருத்துவமனைகள் தவிர தனியார்
மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
தொ.அ.ஈ மருந்தகங்களின் மருத்துவ
அலுவலர்கள் மற்றும் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்கள் அவர்களின் அதிகார
பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மருத்துவ செலவு மீள பெறும்
பட்டிகள் தொடர்பான கோரிக்கைகளை ஒன்றிய அரசின் மருத்துவ
திட்ட (Central Government
Health Scheme) விகிதத்தின் அடிப்படையில், பரிசீலினை செய்து உரிய
தொகையினை, மீளப்பெற்று வழங்கப்படும். ரூ.1 இலட்சம் முதல் ரூ.5 லட்சம், வரையிலான மருத்துவ செலவு மீளப்பெறும் பட்டிகள்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொ.அ.ஈ) இயக்குநர் அளவிலும், ரூ.5 இலட்சத்திற்கு மேற்பட்ட
பட்டிகள் அரசு அளவிலும் காப்பீட்டாளர்களுக்கு மீளப்பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
2. புரிந்துணர்வுஒப்பந்தம் (ஒப்பந்தம் செய்து கொண்ட
மருத்துவமனைகள்)
புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையின் (CGHS Rate) கீழ் ஒப்பந்தம்
செய்யப்பட்ட 75 சிறப்பு மற்றும் 107 உயர் சிறப்பு சிகிச்சை வசதி கொண்ட தனியார்
மருத்துவமனைகளில் காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு
கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் மற்றும்
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களின் மருத்துவரின் பரிந்துரைகளின் பேரில், காப்பீட்டு நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப
உறுப்பினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வொப்பந்தத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொ.அ.ஈ) இயக்குநர் மூலம்
காப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மருத்துவ
சிகிச்சைக்கான பட்டிகள் நேரடியாக தீர்வு செய்யப்படுகின்றன.