காப்பீடு செய்யப்பட்ட
நபர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு சமூகப்
பாதுகாப்புப் பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தொ.அ.ஈ திட்டத்தில்
தொழிலாளர் மற்றும் வேலையளிப்போரின் பங்களிப்பாக செலுத்தப்படும்
பங்களிப்பானது, அவசர மருத்துவ தேவை மற்றும் பிற இடர்களின் போது
காப்பீட்டாளரின் வருவாய் மற்றும்
சேமிப்புகளில் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாதவண்ணம் அவர்களுக்கு உதவுகின்றது.
(1)
மருத்துவப் பலன்
தொ.அ.ஈ. கழக காப்புறுதி வசதியுள்ள நிறுவனத்தில் காப்பீட்டாளர் பணியில் சேர்ந்த நாள் முதல் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் அந்நிறுவனத்தில் பணியிலிருக்கும் வரை வழங்கப்படும் (அ) முதல் நிலை சிகிச்சை (புறநோயாளி) மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு (உள்நோயாளி) சிகிச்சையைப் (SST) பெற, காப்பீடு செய்யப்பட்ட நபர் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் அத்துறையில் பணியாற்ற வேண்டும் மற்றும் பங்களிப்பு காலத்தில் குறைந்தபட்சம் 78 நாட்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். குடும்பத்திற்கான SST சிகிச்சையைப் பொறுத்தவரை, காப்பீடு செய்யப்பட்ட நபர் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து குறைந்தபட்சம் 1 வருடம் காப்பீடு செய்யப்பட்ட துறையில் பணியாற்ற வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 156 நாட்கள் (ஒவ்வொரு பங்களிப்பு காலத்திலும் 78 நாட்கள்) பங்களிப்பு செய்ய வேண்டும். தொ.அ,ஈ, மருந்தகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தொ.அ.ஈ மருத்துவமனைகள் மூலம் முதன்மை பராமரிப்பு மற்றும் இரண்டாம் நிலை / மூன்றாம் நிலை பராமரிப்பை வழங்குகின்றன.
மகப்பேறு உதவி
பெண் காப்பீட்டு நபர்களுக்கு, மகப்பேறுசலுகை அதிகபட்சமாக 26 வாரங்களுக்கு வழங்கப்படும். அதாவது முதல் 2 குழந்தைகளுக்கு மட்டும் மற்றும் பிரசவ தேதிக்கு 8 வாரங்களுக்கு மிகையாகாமலும் இருக்க வேண்டும். குழந்தை ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து குழந்தையை பெற்றுக் கொள்ளும் தாய் / தத்தெடுக்கும் தாய் 12 வார மகப்பேறு சலுகையை பெற உரிமை பெறுவார்.
சார்ந்திருப்போருக்கான
உதவி
காப்பீட்டாளர் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்து அல்லது அவர் செய்யும் தொழில் மூலம் ஏற்படும் நோயினால் இறக்க நேர்ந்தால், அவரின் ஊதியத்தில் 90% அவரைச் சார்ந்தவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
உடல் நலமின்மைக்கான உதவி
ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 91 நாட்களுக்கு சான்றளிக்கப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட காப்பீட்டாளர்களுக்கு ஊதியத்தில் 70% ரொக்க இழப்பீடாக உடல்நலமின்மை பலன் வழங்கப்படும். உடல் நலமின்மை உதவித்தொகைக்கு தகுதி பெற, காப்பீட்டாளர்கள் 6 மாத காலத்தில், 78 நாட்களுக்கு பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.
நீட்டிக்கப்பட்ட உடல்நலமின்மைக்கான உதவி
34 வீரியமிக்க மற்றும் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள காப்பீட்டாளர்களுக்கு ஊதியத்தில் 80% அதிகரிக்கப்பட்ட விகிதத்தில், இரண்டு ஆண்டுகள் வரை இவ்வுதவி நீட்டிப்பு செய்யப்படும்.
மேம்படுத்தப்பட்ட உடல்நலமின்மைக்கான உதவி
உற்பத்தி வயதில் உள்ள காப்பீட்டாளர்களுக்கு பெண் கருத்தடை / ஆண் கருத்தடை போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளும் போது, அதிகரிக்கப்பட்ட உடல் நலமின்மைக்கான உதவி வழங்கப்படும். கருத்தடை மேற்கொள்ளும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் மற்றும் 14 நாட்களுக்கு முழு ஊதியத்திற்கு சமமான அதிகரிக்கப்பட்ட இவ்வுதவி வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை
(அ) தற்காலிக இயலாமைக்கான சலுகை
காப்பீட்டாளர் பணியில் சேர்ந்த நாள் முதல், இவ்வுதவி வழங்கப்படும். இயலாமை தொடரும் வரை, ஊதியத்தில் 90 % மாதாந்திர தொகையாக இவ்வுதவி வழங்கப்படுகிறது.
(ஆ) நிரந்தர இயலாமைக்கான சலுகை
காப்புறுதி வசதியுள்ள நிறுவனத்தில் காப்பீட்டாளர் பணியில் சேர்ந்த நாள் முதல், பணியில் இருக்கும்போது நிரந்தர இயலாமை ஏற்படின், நிரந்தர இயலாமைக்கான உதவி வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
மருத்துவ குழுவின்
பரிந்துரையின்படி, சம்பாதிக்கும் திறன்
இழப்பிற்கு ஏற்ப மாத ஊதியத்தில் 90% மாதாந்திர தொகையாக வழங்கப்படும்.
(1) வேலையின்மைக்கான உதவித்தொகை
(அ) ராஜீவ் காந்தி ஷ்ராமிக்
கல்யாண் யோஜனா
காப்பீட்டாளர், தொழிற்சாலை மூடப்படுவதாலோ, ஆட்குறைப்பு செய்யப்படுவதாலோ, பணியில் இல்லாத நேரத்தில் நிரந்தரமாக இயலாமை ஏற்படுவதாலோ அல்லது இதர எதிர்பாராத காரணங்களால் சுயவிருப்பின்றி வேலை இழக்க நேரிட்டால், குறைந்தபட்சம் 2 வருடம், அந்த தொழிற்சாலையில் தொடர்ந்து வேலை பார்த்திருப்பின், அவர்களுக்கு 24 மாதங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவரது சராசரி தினசரி ஊதியத்தில், 50% முதல் 12 மாதங்களுக்கு, அடுத்த 12 மாதங்களுக்கு 25% வழங்கப்படும்.
(ஆ)
அடல் பீமித் வியக்தி
கல்யாண் யோஜனா
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகமானது 01.07.2018 முதல், காப்புறுதி வசதியுள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட காப்பீட்டாளர், இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு மற்றும் தொடர்ச்சியாக 4 பங்களிப்பு காலங்களில் 78 நாட்களுக்கு குறைவில்லாமல் பணிபுரிந்திருந்தால்,வருவாயில் 25% மிகாமல் 90 நாட்கள் வரை இழப்பீட்டு தொகை பணப்பயனாக வாழ்நாளில் ஒரு முறை வழங்கப்படும்.
தொ.அ.ஈ. திட்டத்தின் கீழ் பிற நன்மைகள்
(அ ) பேறுகால
செலவுகள்
காப்பீட்டாளரின் மனைவி அல்லது பெண் காப்பீட்டாளருக்கு, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிலையங்களில் பிரசவ வசதிகள் இல்லாதிருந்தால், ரூ.7,500/- பேறுகால படியாக வழங்கப்படும்.
(ஆ ) இறுதிச் சடங்கு உதவி
காப்பீட்டாளர் இறக்க நேரிட்டால், இறுதிச்சடங்கு உதவித் தொகையாக ரூ.15,000/- அவரைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது இறுதிச் சடங்குகளைச் செய்யும் நபருக்கோ வழங்கப்படும்.
(இ) ஓய்வு பெற்ற காப்பீட்டாளர்களுக்கு மருத்துவ சலுகை / காப்பீட்டு வேலைவாய்ப்பை நிறுத்தியவர்கள் (ESI விதி 60/61 இன் கீழ்)
குறைந்தபட்ச
பங்களிப்பாக வருடத்திற்கு ரூ. 120/-செலுத்தியிருந்தால், காப்பீட்டாளர்களுக்கு வயது
முதிர்வு கால மருத்துவ சேவையின் கீழ் வழங்கும் பயன்கள் அவருக்கும் அவரின் குடும்ப
தலைவிக்கும் வழங்கப்படும். மேலும் வயது முதிர்வின் மூலமும் விருப்ப ஓய்வு /
பணியாளர் ஓய்வு திட்டம் மூலம் நிரந்த இயலாமை காரணமாக பணியில் இருந்து விலகும்
பொழுதும், அவர்களின் மூலமாக பயன் அடைபவர்களுக்கும் (பயனாளர் மற்றும்
மனைவிமார்களுக்கும் ) பொருந்தும்.
(ஈ) ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலிகள், பல்செட்கள், மூக்கு கண்ணாடிகள் மற்றும் காது கேளாதோருக்கான கருவி போன்ற உதவி சாதனங்கள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகின்றன.
(உ) தடுப்பூசிகள், எச்ஐவி / எயிட்ஸ் நோய் கண்டுப்பிடிப்பு மற்றும் சிகிச்சை அளித்தல் போன்ற நோய் தடுப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
(ஊ) தேசிய திட்டங்களான குடும்ப நலம் மற்றும் காசநோய் கட்டுப்பாடு திட்டம் செயல்முறைப் படுத்தப்படுகின்றன.
மருத்துவமனை மேம்பாட்டுக் குழு
மருத்துவமனை மேம்பாட்டு குழு மூலம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருந்தக கட்டிடங்களின் சிறிய மற்றும் பெரிய பழுது பார்க்கும் பணிகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் போன்றவற்றிக்கு, மருத்துவமனை வளர்ச்சி நிதி வழங்கப்படுகிறது. மருத்துவமனை மேம்பாட்டுக் குழு மற்றும் குழு தலைவர் முடிவிற்கு பின் இக்குழு கூட்டத்தில் தொழிலாளர்
அரசு ஈட்டுறுதி கழகத்தால் வருடாந்திர பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்புக்காக
நேரடியாக நிதி வழங்கப்படுகிறது.
காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு மருத்துவப் பலன்கள்
காப்பீடு செய்யப்பட்ட நபரின் குடும்பத்திற்கு மருத்துவப் பலன்களின் தன்மை மற்றும் அளவு ஆகியவை அவ்வப்போது தொ.அ.ஈ. கழகம் கலந்தாலோசித்து மாநில அரசாங்கத்தால் குறிப்பிடப்படக்கூடியதாக
இருக்க வேண்டும்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (தொ. அ.ஈ ),
தொழிலாளர் அரசு காப்பீட்டு (தொ. அ.ஈ) மருத்துவமனை, முதன்மைக் கட்டிடம், மேடவாக்கம் டேங்க் சாலை, அயனாவரம், சென்னை - 600 023.
பதிப்புரிமை @ மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (தொ.அ.ஈ). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
W3C
