தொ.அ.ஈ திட்டத்தின் நோக்கம்
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் (தொ.அ.ஈ) முதன்மை நோக்கம், வேலையின் போது ஏற்படும் நோய், நிரந்தர அல்லது தற்காலிக இயலாமை அல்லது இறப்பு தொடர்பாக தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதாகும். தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டம் 1948, காப்பீட்டாளர்களைச் சார்ந்தவர்களுக்கான உதவிகளை வழங்குகிறது.
இந்தியாவின் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் என்பது பல பரிமாண சமூகப் பாதுகாப்பு அமைப்பாகும். இத்திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் என்பது ஒரு விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு தொ.அ.ஈ திட்டம் பொருந்தும் ரூ. 21,000/- வரை மாதச் சம்பளம் பெறும் பணியாளர்கள் தொ.அ.ஈ திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். தொ.அ.ஈ திட்டமானது தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது.
இது வேலையில் இணைந்த முதல் நாளிலிருந்து மருத்துவச் செலவு மற்றும் மகப்பேறு பலன்களை வழங்குகிறது. உடல், ஊனம் தொடர்பான வருமான இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. நோய் மற்றும் வேலையின்மைக்கான இழப்பீடுகளை வழங்குகிறது மற்றும் காப்பீட்டாளர்களைச் சார்ந்திருப்பவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள்வழங்குகிறது.